ஜேர்மானிய ஆன்மீக குரு ஒருவர் கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக 1,000 மீன்களை கொண்டு வந்து விட்ட சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த ஆன்மீக குருவான Thomas Gerhard காசி மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் இந்தியா வந்தார். அப்போது கங்கை நதியில் பல உடல்கள் விடப்படுவதை கண்ட அவர் அந்த நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டார்.
இந்த நோக்கில் அவர் 1,000 மீன்களை கங்கையில் விட்டார். இந்த மீன்கள் நீரில் இருக்கும் உடல் எச்சங்களை உண்ணுவதால் கங்கை நதி சுத்தமாகும் என Thomas கூறியுள்ளார்.