12.4 C
Cañada
March 30, 2025
உலகம்

காசாவில் ஹமாஸினை வெளியேறக் கோரி மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டம்

காசாவில் ஹமாஸுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஹமாஸை வெளியேற்ற கோரி வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றுள்ளனர். இது இஸ்ரேல்-காசா போரின் கோரத் தாக்குதல்களுக்கு மத்தியில் மக்கள் கோபம் வெடித்ததைக் காட்டுகிறது.

காசாவின் வடக்கு பகுதியில் உள்ள பெட் லாஹியா நகரில் இந்த போராட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் “ஹமாஸ் வெளியே போ” என கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஹமாஸ் போராளிகள் இந்த போராட்டத்தை ஒடுக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆவேசமாக முழக்கமிட்டதைக் காணலாம்.

இதுகுறித்து ஹமாஸ் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. இதே நேரத்தில் ஹமாஸ் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தேசத்துரோகிகள் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இஸ்ரேல் மார்ச் 18 முதல் காசாவில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை தொடங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. அதேவேளை ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டுகிறது.

Related posts

தென்னாபிரிக்காவில் சாகச நிகழ்ச்சியின் போது விழுந்து நொறுங்கிய விமானம்

admin

வடக்கு மாசிடோனியாவில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 60 பேர் பலி

admin

ஏலத்திற்கு விடப்படவுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் நீலநிற பறவை

admin

Leave a Comment