கேரளாவில் மத்திய உளவுத்துறை (IB) இளம் பெண் அதிகாரியான மேகா (24) ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் பெட்டா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கூடல் பகுதியைச் சேர்ந்த மேகாவின் உடல் மீட்கப்பட்டது. அவர் பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்ததாக தெரிகிறது.
முதற்கட்ட தகவலின்படி, அவர் தானாகவே உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரயில் லோகோ பைலட் ஒரு பெண் தண்டவாளத்தில் குதித்ததை பார்த்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளாராம். இருப்பினும் அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
மேகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.