தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான உய்சோங்கில் ஏற்பட்ட காட்டுத்தீயானது பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக வேகமாகப் பரவி, தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த காட்டுத்தீயினால் 14,694 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக 3,300க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போதைய நிலைமைப்படி, காட்டுத்தீயில் 88% பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க தென் கொரிய அரசு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் பதில் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.