11.9 C
Cañada
April 4, 2025
சினிமா

நடிக்க தெரியாத ஒரு அழகான நடிகை என்ற ரசிகரின் கமெண்டிற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி

கன்னட சினிமாவில் தொடங்கிய நடிகை ராஷ்மிகா மாந்தண்ணா, தெலுங்கு, தமிழ், மற்றும் தற்போது பாலிவுட் படங்களில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்திய ரசிகர்களிடம் “National Crush” என்ற பெயரைப் பெற்றுள்ள அவர், சமீபத்தில் வெளியான அவரது ஹிந்தி படம் “சாவா” பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெற்றது. அதேபோல், சல்மான் கானுடன் நடித்து வரும் “சிக்கந்தர்” படத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் “நடிப்பு திறமை இல்லாத ஒரு அழகி” என அவரது புகைப்படத்திற்கு கமெண்ட் செய்தார். இதற்கு ராஷ்மிகா “ஆனால், நீங்கள் அழகு என்று கூறியுள்ளீர்கள், அதை நான் எடுத்துக்கொள்கிறேன்!” என நகைச்சுவையுடன் பதிலளித்தார். அவரது பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

விஜய்யின் கடைசி படத்தில் ஒன்றுகூடிய தளபதி பாய்ஸ்

admin

நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..!

admin

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்

admin

Leave a Comment