20.2 C
Cañada
April 2, 2025
உலகம்

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரி விதிப்பு: ட்ரம்ப்

அமெரிக்கா வெனிசுலாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதல் வரி விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது வெனிசுலா மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது கட்ட வரியாகும்.

டொனால்டு ட்ரம்ப் ஜனவரியில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்து வருகிறார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே வெனிசுலா மீதான கூடுதல் வரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் வெனிசுலாவுக்கு இடையேயான தொடர்பு நீண்ட காலமாக சர்ச்சைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் வெனிசுலா அதிக அளவில் குற்றவாளிகளையும் போதைப் பொருட்களையும் அமெரிக்காவுக்கு கடத்துவதில் முக்கியமான பங்காற்றுகிறது என்று குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த வரிக்கு இணையாக தற்போதும் 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரிவிதிப்பு வரும் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3ம் இடத்தில் பாகிஸ்தான்

admin

ஏமனின் ஹவுதி படைகளுக்கு எதிராக டொனால்டு ட்ரம்ப் இன் இராணுவத் தாக்குதல்

admin

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ISIS தலைவர் அபு கதீஜா பலி

admin

Leave a Comment