உத்தரபிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் பப்லூ மற்றும் ராதிகா என்ற தம்பதியினர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வேலை காரணமாக பப்லூ அடிக்கடி வீட்டை விட்டு வெளியே தங்கியதால் ராதிகா கிராமத்தில் உள்ள வேறொருவருடன் பழக்கம் கொண்டார்.
இது குறித்து பப்லூவின் குடும்பத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தபோதும் அவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் மனைவியின் முடிவை ஏற்றுக்கொண்டார். மேலும் ராதிகாவிற்கும் அவரது காதலருக்கும் திருமணம் செய்து வைக்க தீர்மானித்தார்.
முதலில் நீதிமன்றத்தில் அவர்கள் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்த பப்லூ பின்னர் உள்ளூர் கோவிலில் ஒரு விழாவையும் நடத்தினார். அங்கு கிராம மக்கள் முன்னிலையில் ராதிகாவும் அவரது காதலரும் மாலைகள் மாற்றிக் கொண்டனர்.
தன் குழந்தைகளை பார்த்துக்கொள்வதை பப்லூ உறுதியளித்ததோடு இதற்கு ராதிகாவும் ஒப்புக்கொண்டார். இந்த விசித்திரமான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.