இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள “வீர தீர சூரன்” திரைப்படம் HR பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, மற்றும் சுராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்த நிலையில், B4U நிறுவனம் படத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் பட வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்தது.
தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட்டபோது வீர தீர சூரன் படத்திற்காக ரூ.7 கோடி டெபாசிட் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் OTT உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 48 மணி நேரத்திற்குள் அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.