9.1 C
Cañada
March 31, 2025
உலகம்

எகிப்தியில் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து: 6 ரஷ்யர்கள் உயிரிழப்பு, 39 பேர் மீட்பு

எகிப்தியின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹுர்காடா அருகே சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 ரஷ்யர்கள் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்த 39 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து வியாழக்கிழமை ஹுர்காடா கடற்கரையோர சுற்றுலா தளத்தில் இடம்பெற்றுள்ளது. “சின்ட்பாட்” எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 45 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 5 எகிப்திய பணியாளர்களுடன் கடலில் சென்றபோது கரையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் திடீரென மூழ்கியது.

விபத்துக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. விபத்து நேரத்தில் வானிலை தெளிவாகவும் கடலில் நல்லக் காட்சியமைப்பும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பனாமா கால்வாயை பிடிக்க இராணுவத்திடம் ஆலோசனை கேட்கும் டிரம்ப்

admin

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ISIS தலைவர் அபு கதீஜா பலி

admin

ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவிப்பு

admin

Leave a Comment