ட்ரம்பின் கார் வரிவிதிப்பு ஜேர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி குறிப்பாக Saxony மாகாணத்தில் உள்ள Zwickau நகரம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. இவ்வூரில் கார் உற்பத்தி 120 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஜேர்மனியின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருப்பதால் ட்ரம்ப் 25% வரி விதித்தால் ஜேர்மன் கார் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
2024ஆம் ஆண்டில் மட்டும் ஜேர்மனி 36.8 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள கார்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. புதிய வரிவிதிப்பு காரணமாக ஜேர்மன் கார் நிறுவனங்கள் நேரடியாக அமெரிக்காவிலேயே தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கலாம். இதனால் ஜேர்மனியில் வேலை வாய்ப்புகள் குறைந்து மக்கள் வேலையிழப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள்.
வேலை இழப்பால் Zwickau நகர மக்கள் ஊரை காலி செய்யும் நிலை உருவாகலாம். இதனால் நகரத்தில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.