நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தில் நடித்த காலத்திலிருந்தே அவரது திருமணம் தொடர்பாக பல்வேறு செய்திகள் பரவி வந்தன. அதற்கிடையில் நடிகை அனுஷ்காவுடன் அவர் காதலில் இருப்பதாகவும் திருமணம் செய்ய இருப்பதாகவும் வதந்திகள் உலாவின. ஆனால் இது உண்மையல்ல நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என பிரபாஸ் விளக்கம் கொடுத்தார்.
அதன் பிறகு பிரபாஸின் குடும்பத்தினர் அவருக்கு பெண் பார்த்து வருவதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் ஹைதராபாத் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுடன் பிரபாஸ் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில் இந்த தகவல்களில் எந்த வித உண்மையும் இல்லை என பிரபாஸ் தரப்பு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.