9.1 C
Cañada
March 31, 2025
இலங்கை

பௌத்த தேரரின் படுகொலை குறித்த விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்

அனுராதபுரம் எப்பாவல பகுதியில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். விசாரணைகளின் படி அவர் கடைசியாக 23ஆம் திகதி இரவு 8.29 மணிக்கு ஒருவருக்கு அழைப்பு விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் 25ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம். மடத்தின் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த தேரரை யாரோ ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி முகத்தில் பலத்த காயங்கள் ஏற்படுத்தி பிறப்புறுப்புகளை துண்டித்து எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட தேரரால் நிறுவப்பட்டது. தேரர் மட்டுமே அங்கு வசித்து வந்துள்ளார். கிராமவாசிகள் பெரும்பாலும் இந்த ஆலயத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. கொலை நடந்த நாளில் மற்றொரு ஆலயத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் ஆலயத்திற்கு வருகை தந்தபோது இறந்த தேரர் ஒரு நாற்காலியில் கிடந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது கொலை சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தேரரின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் இருந்ததோடு அவரது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் ஆலயத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வீசப்பட்டிருந்தன. மேலும் அவர் பயணங்களுக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி மருத்துவமனை அருகே கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

கொலை நடந்த இடத்தில் மூன்று ஜோடி காலணிகள் மற்றும் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மேலதிக விசாரணைக்காக பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டன. இந்தக் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பயிற்சி பெற்று வந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய சம்பவத்திற்குப் பிறகு இந்த கொலை மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

Related posts

இலங்கையில் குடும்ப வைத்தியர் சேவை அறிமுகம்!

admin

இந்தியாவில் இருந்து பஸ்கள் வாங்கப்பட்டமை தொடர்பான வெளிக்கொணர்வு

admin

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு- இலங்கையில் செலுத்தும் தாக்கம்

admin

Leave a Comment