15.7 C
Cañada
April 2, 2025
உலகம்

விரைவில் புடின் மரணமடைவார், அதனால் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்: ஜெலன்ஸ்கி

விரைவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மரணமடைவார் அதன்மூலம் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் நீண்ட காலமாக தொடர்ந்துவரும் நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாரீசுக்கு சென்றுள்ள ஜெலன்ஸ்கி தற்போது உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யாவிற்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய ஆபத்தாக இருப்பதாகவும் புடின் தனது நோக்குகளை மேற்கத்திய நாடுகளுடன் நேரடியாக மோதும் வரை நிறுத்தமாட்டார் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒன்றுபட்டு புடினுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். புடின் ஐரோப்பா-அமெரிக்க கூட்டணியைப் பிரிக்க நினைக்கிறார், ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை. விரைவில் அவர் மரணமடைவார், அதனுடன் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Related posts

500000 மேற்ப்பட்ட சட்டவிரோதமாக குடியேறியோர்ர்க்கு நாடு கடத்தல் உத்தரவு விதித்த டிரம்ப்

admin

ட்ரம்பின் முடிவினால் பாதிக்கப்பட போகும் எச்.ஐ.வி நோயாளிகள்

admin

வடக்கு மாசிடோனியாவில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 60 பேர் பலி

admin

Leave a Comment