ஜெர்மனியில் மார்ச் மாதத்தில் வேலையின்மை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இது நாட்டின் தொழிலாளர் சந்தை மன அழுத்தத்தின் புதிய அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
மத்திய தொழிலாளர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அக்டோபர் 2024 க்குப் பிறகு இது ஏற்பட்ட மிகப்பெரிய வேலைவாய்ப்பு குறைவாகும். வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 26,000 ஆக அதிகரித்து மொத்தம் 2.92 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஆய்வாளர்கள் முன்பாக கணித்திருந்த 10,000 வேலைவாய்ப்பு இழப்பு எதிர்பார்ப்பை விட இதன் அதிகரிப்பு இரட்டிப்பு அளவுக்கு உயர்ந்துள்ளது. பருவகால மாற்றங்களுக்கேற்ப சரிசெய்யப்பட்ட வேலையின்மை விகிதம் 6.3% ஆக உயர்ந்துள்ளது.
முந்தைய மாதத்தில் இது 6.2% ஆக இருந்த நிலையில் தற்போதைய வேலைவாய்ப்பு குறைவு சந்தை கணிப்புகளை விட அதிகமாக இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.