17.9 C
Cañada
April 1, 2025
உலகம்

ட்ரம்பின் கிரீன்லாந்து திட்டத்திற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்காது – புடின் திடீர் மனமாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கிரீன்லாந்து தொடர்பான திட்டத்திற்கு ரஷ்யா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்காது என விளாடிமிர் புடின் தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப் தனது பதவிக்காலத்தில் பல்வேறு பிராந்தியங்களை அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். குறிப்பாக கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு சமீபத்திய நகர்வுகளால் உறுதியாகியுள்ளது.

இந்த சூழலில் ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ள மர்மன்ஸ்க்கில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று விஜயம் செய்தார். அங்கு அவர் ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யாவின் ஆட்சியை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். மேலும் அமெரிக்காவின் கிரீன்லாந்து திட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இது தொடர்பாக ரஷ்யா எதுவும் செய்யப் போவதில்லை என்றும் கூறினார்.

அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்து புடின் பேசுகையில் கிரீன்லாந்து தொடர்பான அமெரிக்காவின் திட்டங்கள் தீவிரமானவை என்றும், அமெரிக்கா ஆர்க்டிக் பிராந்தியத்தில் தனது இராணுவ மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுக்க உறுதியுடன் செயல்படுவதாகவும் விளக்கமளித்தார். ட்ரம்பின் இந்த பிராந்திய விரிவாக்க நடவடிக்கைகளை விமர்சிக்காமல் புடின் அதை அனுமதிக்கத் தயாராக இருப்பது முக்கிய கவனத்தை பெற்றுள்ளது.

புடின் கிரீன்லாந்து விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது அமெரிக்காவும் டென்மார்க்கும் தான், ரஷ்யாவிற்கு அதில் பங்கில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த திடீர் மனம் மாற்றம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில் கிரீன்லாந்து நிர்வாகம் விற்பனைக்கு இல்லை என்று உறுதியாக மறுத்துள்ளது. அதேபோல் டென்மார்க்கும் அமெரிக்காவின் திட்டத்தை நிராகரித்துள்ளது.

Related posts

எலான் மஸ்குக்கு தடை விதித்த அமெரிக்க பெடரல் நீதிமன்றம்

admin

கனேடிய வரி விதிப்புக்கு எதிராக கொந்தளித்த ட்ரம்ப்

admin

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ – ஜேர்மனியின் புதிய உதவித் திட்டம்

admin

Leave a Comment