ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்து சில நாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றார். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுக்கின்றார்.
இந்த நிலையில் சில அமெரிக்கர்கள் கனேடிய குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வொன்றின் தகவலின்படி ஐந்தில் ஒருவர் கனேடியராக ஆக விரும்புகிறார்கள்.
மேலும் ஆய்வில் பங்கேற்ற 20% அமெரிக்கர்கள் தங்கள் மாகாணத்தைக் கனடாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் வெறும் 9% பேர்தான் கனடா அமெரிக்காவுடன் இணைக்கப்படலாம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.