தென் ஆபிரிக்காவில் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தைக்கு நப்பி இல்லாததால் தாய் அதை வாங்க கடைக்குச் சென்றிருந்தார். தாய் வீடு திரும்பியபோது குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்ததை பார்த்து குழம்பிப் போனார்.
தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உடனே வைத்தியசாலைக்குச் சென்ற போது மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பலத்த காயங்களால் அவதிப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தக் கொடூர சம்பவத்திலிருந்து மறு நாள் குழந்தை உயிரிழந்தது.
இந்த பயங்கர செயலை 37 வயதான ஹூகோ என்பவர் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. தென் ஆபிரிக்க நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.