தெலுங்கு திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி, இன்று உலகளவில் பிரபலமான நடிகராக உயர்ந்துள்ளார் அல்லு அர்ஜுன். கடந்த ஆண்டு வெளியான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சுகுமார் இயக்கிய இப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் தெலுங்கு சினிமா வரலாற்றில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை முதன்முதலில் பெற்றவர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அல்லு அர்ஜுன் திரையுலகில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ரூ. 100 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அதோடு ஒரு விளம்பர படத்துக்கு ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் ரூ. 80 கோடி மதிப்புள்ள தனி விமானம் வைத்திருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள அவரது பிரமாண்டமான வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என கூறப்படுகிறது. இதையெல்லாம் கணக்கிடும்போது அல்லு அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 460 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.