உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் 17 ஆண்டுகளாக மறைந்திருந்த கத்தரிக்கோல் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2008ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள ஷி மெடிக்கல் கேர் வைத்தியசாலையில் சந்தியா என்ற பெண் குழந்தை பெற்றெடுத்தார். பிரசவத்திற்குப் பிறகு அவர் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சமீபத்தில் லக்னோ மருத்துவக் கல்லூரியில் எடுத்த எக்ஸ்ரே மூலம் சந்தியாவின் வயிற்றுக்குள் ஒரு கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது. மார்ச் 26ஆம் திகதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த கத்தரிக்கோலை அகற்றினர்.
இதையடுத்து சந்தியாவின் கணவர் பிரசவம் செய்த மருத்துவர் புஷ்பா ஜெய்ஸ்வால் மீது போலீசில் முறைப்பாடு செய்தார். அந்த முறைப்பாட்டில் 17 ஆண்டுகளாக தனது மனைவி நரக வேதனை அனுபவித்ததற்கு அந்த மருத்துவரின் அலட்சியம் தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மருத்துவ தவறுகளின் தீவிரத்தை பறைசாற்றும் பரபரப்பான விவகாரமாக மாறியுள்ளது.