எலோன் மஸ்க் தனது எக்ஸ் தள நிறுவனத்தை 45 பில்லியன் டொலருக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனை எலோன் மஸ்க்கின் சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்திற்கே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2022ஆம் ஆண்டு டுவிட்டரை வாங்குவதற்காக அவர் செலுத்திய தொகையுடன் ஒப்பிடும்போது தற்போதைய விற்பனை மதிப்பு அதிகமாக இருக்கிறது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்கியுள்ளது.
மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தகவலின் படி எக்ஸ் தளத்திற்கான தற்போதைய மதிப்பீடு 33 பில்லியன் டொலராகும். மேலும் எக்ஸ் ஏ.ஐ. மற்றும் எக்ஸ் தள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 80 பில்லியன் டொலராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.