இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நில அதிர்வு அந்நாட்டு வடக்கு சுமத்ரா பகுதியில் காலை 8.28 மணிக்கு பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
மியான்மாரில் சக்திவாய்ந்த நில அதிர்வு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில அதிர்வும் மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.