மெட்டா நிறுவனம் உலகளவில் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை இயக்கி வருகிறது.
வாட்ஸ்அப் அறிமுகமான காலத்திலிருந்து, மெட்டா நிறுவனம் அதில் பல்வேறு புதுமையான அப்டேட்டுகளை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் இருக்கும் மாதிரி, வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸில் பாடல்களை சேர்க்கும் புதிய அம்சத்தை மெட்டா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.