நடிகர் சூர்யா தனது ஆரம்ப காலங்களில் பல்வேறு கேலி கிண்டல்களுக்குப் பிறகு, தனது உழைப்பாலும் சினிமாவின் மீது உள்ள அன்பாலும் இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பல வெற்றி படங்களை வழங்கி தனக்கென ஒரு விசுவாசமான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ரெட்ரோ” என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 20 ஆண்டுகளாகியும் இன்றுவரை அவர்களின் காதல் குறையாமல் நீடித்து வருகிறது.
சமீபத்தில் இந்த ஜோடி கோலிவுட் நடிகைகளுக்காக ஒரு சிறப்பு பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகள் டிடி நீலகண்டன், விஜே ரம்யா மற்றும் நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.