டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் அமெரிக்காவில் கடும் நெருக்கடி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. கனடா மீது அவர் முன்மொழிந்துள்ள வரி விதிப்பு அமெரிக்காவில் எதிர்பாராத பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சாஃப்ட்வுட் மரத்திற்கு அமெரிக்கா வரி விதிக்க முடிவு செய்துள்ள ட்ரம்ப் இதன் மூலம் அமெரிக்காவில் டாய்லெட் பேப்பர் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் சாஃப்ட்வுட் மரத்தின் மீதான வரியை 27 சதவீதமாக உயர்த்தும் திடீர் முடிவை ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி 50 சதவீதமாக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக டாய்லெட் பேப்பர் மற்றும் பேப்பர் துண்டுகள் தயாரிப்புக்கு தேவையான NBSK என்ற மூலப்பொருளின் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில் 2 மில்லியன் டன் கனேடிய NBSK அமெரிக்கா இறக்குமதி செய்திருந்தது. ஆனால் கனடா இப்போது NBSK ஏற்றுமதி செய்யாவிட்டால் அமெரிக்க நிறுவனங்கள் பல நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ட்ரம்பின் வரி 50 சதவீதத்திற்கு தாண்டினால் பல அமெரிக்க நிறுவனங்கள் மூடப்பட வாய்ப்பு உள்ளது.