பீஹாரில் குழந்தை பெற விரும்பிய ஒருவர் மந்திரவாதியின் ஆலோசனைப்படி இளைஞர் ஒருவரை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுகல் யாதவ் என்பவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்த நிலையில் பொலிசார் அவரைத் தேடிவந்தனர்.
Banger கிராமத்தில் ஒரு இடத்தில் சாம்பலுக்குள் மனித எலும்புகள் மற்றும் யுகல் யாதவின் செருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்ட பொலிசார் மந்திரவாதி ராமஷிஷ் ரிக்யாசனின் வீட்டை அடையாளம் கண்டு, அவரது உறவினரான தர்மேந்திராவை கைது செய்தனர்.
விசாரணையில் குழந்தை பெற முடியாத சுதிர் பாஸ்வான் ராமஷிஷிடம் ஆலோசனை கேட்டபோது, நரபலி கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரியவந்தது. இதன்படி தர்மேந்திரா யுகல் யாதவை கடத்தி அவரது தலையை வெட்டியதுடன் உடலை மந்திரம் செய்வதற்காக தீயில் எரித்துள்ளார்.
தர்மேந்திரா கொடுத்த தகவலின் பேரில் யுகல் யாதவின் தலை மீட்கப்பட்டது. மேலும் இது மட்டுமல்லாது முன்னதாகவும் ஒருவரை நரபலி கொடுத்து அவரது உடலை கிணற்றில் வீசியதாக தர்மேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகள் ஒப்புக்கொண்டனர்.
பொலிசார் தற்போது சுதிர் பாஸ்வான் தர்மேந்திரா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். இதனுடன் தலைமறைவாக உள்ள மந்திரவாதி ராமஷிஷை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.