20.2 C
Cañada
April 1, 2025
உலகம்

மாஸ்கோவில் புடினின் கார் வெடிப்பு: புடினை கொல்ல நடந்த சதியா?

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கார் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த Aurus Senat Limousine என்ற வாகனம் மாஸ்கோவில் உள்ள FSB ரகசிய சேவை தலைமையகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்தது.

அந்த காரில் யார் இருந்தார்கள் அல்லது தீ விபத்தின் காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகப் பொருள் படவில்லை. ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயமடைந்தவர்களோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,57,000 டொலர்கள் மதிப்புள்ள இந்த கார் எரிந்து சேதமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது புடினை கொல்ல ஒரு சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனாதிபதி புடினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்த முயற்சியும் அணுசக்தி எதிர்வினையை தூண்டும் என கிரெம்ளின் எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு

admin

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 85 பேர் பலி

admin

பசுபிக் பெருங்கடலில் காணாமல் போன மீனவர் 95 நாட்களின் பின் உயிருடன் மீட்பு

admin

Leave a Comment