மியன்மாரின் மண்டலாயில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் முற்றாக தரைமட்டமான கட்டிடமொன்றின் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியாளர்கள் பெண் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர்.
பூகம்பம் ஏற்பட்ட 30 மணிநேரங்களுக்குப் பிறகு 30 வயதான பியுலே கைங் என்ற பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்கைவிலா கட்டிட தொகுதியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் மீட்பு குழுவினர் உதவியுடன் வெளியே கொண்டுவரப்பட்டார்.
பெண்ணை மீட்ட உடனே அவரது கணவர் உணர்ச்சிவீச்சுடன் அவரை கட்டிப்பிடித்து அழுதார். உயிருடன் மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
“அவர் உயிருடன் இருப்பார் என நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை” என்று கணவர் கண்களில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.