மியான்மரில் மார்ச் 28-ஆம் தேதி 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 2,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் இறப்பின் எண்ணிக்கை மேலும் உயர்வதை ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அடுத்து மார்ச் 29-ஆம் தேதி சனிக்கிழமை மியான்மரில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தையும் பாதித்தது. பாங்காக்கில் 33 மாடி உயரத்தில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்து உள்ளது.