19.1 C
Cañada
April 4, 2025
கனடா

கனடாவில் பனி மழை காரணமாக ரயில் போக்குவரத்தில் தடங்கல்

டொராண்டோ, ஒட்டாவா, மற்றும் மொன்றியால் இடையே இயக்கப்படும் VIA Rail பயணிகள் ரயில்கள், பெய்த பனிமழை காரணமாக தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIA Rail தெரிவித்ததாவது கோபர்க் மற்றும் பெல்வில்லுக்கு இடையில் உள்ள CN Rail பாதைகளில் சமிக்ஞை கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்கள் தாமதமாகின்றன.

இந்த சிக்கல்கள் தொடரும் பனிமழை மற்றும் பனிக்கட்டிப் புயல் காரணமாக ஏற்பட்ட மின்தடையால் ஏற்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் பல்வேறு ரயில் கடவைகள் செயலிழந்து ரயில் போக்குவரத்தில் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டொராண்டோ-ஒட்டாவா மற்றும் டொராண்டோ-மொன்றியால் இடையே இயக்கப்படும் ரயில்கள் குறைந்தது 60 நிமிடங்களாவது தாமதமாகும். சில ரயில்கள் அதற்கும் அதிக நேரம் தாமதமாகும் என்று VIA Rail தெரிவித்துள்ளது.

Related posts

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஆறு கட்டிடங்கள் முழுவதுமாக தீக்கிரையானது

admin

ட்ரம்பின் கொள்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க – கனடா எல்லையில் ஆர்ப்பாட்டம்

admin

டொராண்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்

admin

Leave a Comment