நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருந்துள்ளார். அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்தனர். இருப்பினும் பிரிவிற்கான காரணங்களை இருவரும் வெளிப்படையாக கூறவில்லை.
விவாகரத்துக்கு முக்கிய காரணம் நாக சைதன்யா வேறு நடிகையுடன் தொடர்பில் இருந்ததுதான் என அப்போதே சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. அவரும் நடிகை சோபிதாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால் இந்த சர்ச்சை மேலும் அதிகரித்தது.
கடந்த வருடம் நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர்களை பற்றிய ட்ரோல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் அவர்கள் ஒரு இதழுக்கு பேட்டி அளித்த போது “காதலை முதலில் யார் சொன்னது?” என கேள்வி எழுப்பப்பட்டதில், “நாக சைதன்யா தான்” என சோபிதா தெரிவித்தார். இதை நாக சைதன்யாவும் “With Pleasure” என உறுதி செய்தார்.
இந்த தகவல்கள் வெளியான பிறகு சமந்தாவுடன் வாழ்ந்திருந்த போதே நாக சைதன்யா இதை செய்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.