அமேசான் நிறுவனர் மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவரான ஜெப் பீசோஸ் தனது வருங்கால மனைவி லாரன் சான்செஸுடன் ஜூன் 26 முதல் 29ம் தேதி வரை திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விழா இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள ஒரு சொகுசு கப்பலில் நடைபெற உள்ளது.
திருமணத்துக்கு வி.ஐ.பி.க்கள் 200 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா, அவரது கணவர் ஜேர்டு குஷ்னர் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் திருமண நிகழ்வு வெனிஸ் நகர குடிமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் எந்தவிதத்திலும் இடையூறாக இருக்காது என நகர மேயர் லூய்கி ப்ருக்னாரோ உறுதி செய்துள்ளார்.