டிக் டாக் எனப்படும் மொபைல் செயலி உலகளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளது. சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இந்தச் செயலியை நிர்வகிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக் டாக் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி ஜோ பைடன் அரசு இந்தச் செயலிக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிக் டாக்கை எதிர்க்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக டிக் டாக் நிறுவனம் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் டிக் டாக் தடைசெய்யப்பட்டு ஜனவரி 19ஆம் திகதி முதல் அமலில் உள்ள நிலையில் தற்காலிகமாக செயலியின் சேவையை நிறுத்துவதாக நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் டிக் டாக் செயலிக்கு வழங்கப்பட்ட நேரக் கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீட்டிக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.