முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தற்போதைய சூழ்நிலையில் ஒரு நாட்டுடன் மட்டும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்யும் செயல்பாடு மிகவும் ஆபத்தானது என கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்வது சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் அதிருப்தியை உருவாக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக எந்த நிபந்தனைகளும் இன்றி இலங்கைக்கு உதவி செய்த அந்த நாடுகள் இப்போதைய நடவடிக்கையால் குற்றமுணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையின் சுயாதீனத் தன்மை மிக முக்கியமானது என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.