16.3 C
Cañada
April 7, 2025
உலகம்

டிரம்பின் வரிவிதிப்பு: மீட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் காரணமாக மீட்டா (பேஸ்புக்) நிறுவனம் ஒரே நாளில் சுமார் 18 பில்லியன் டாலர்கள் இழந்தது. இதைத் தொடர்ந்து பல அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் பெரும்விதமாக வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்த வரி நடவடிக்கையால் உலகம் முழுவதும் உள்ள 500 முக்கியமான செல்வந்தர்களின் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மொத்தமாக 209 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாகக் கணிக்கப்படுகிறது. இது 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமக்கு விதிக்கப்பட்ட மேலதிக வரிகளுக்கு பதிலடி அளிக்க திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து வருகிற பொருட்களுக்கு அவர்கள் அதிக வரி விதிக்கக்கூடும்.

வல்லுநர்களும் வணிக ஆய்வாளர்களும் டிரம்பின் இந்த வரி நடவடிக்கையை மிகவும் கேவலமான மற்றும் தவறான வரிவிதிப்பு என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related posts

ஹோண்டுராஸ் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் – 12 பேர் பலி

admin

தெற்கு எல்லையில் கடற்படைக் கப்பலை நிறுத்திய ட்ரம்ப்

admin

ஹீத்ரோ விமான நிலைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திருப்பம்

admin

Leave a Comment