அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய வரி திட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
உலக சந்தையில் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது. இது சுமார் 8 சதவீதத்தால் ஏற்பட்ட ஒரு முக்கியமான வீழ்ச்சி என குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் வரி அறிவிப்பு உலக பொருளாதாரங்களை ஆழமான சரிவுக்கு இழுக்கக் கூடும் என்ற அறிவிப்பு வெளியான பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய காலகட்டங்களில் குறிப்பாக 2021ஆம் ஆண்டில் கொவிட்-19 பரவலால் மசகு எண்ணெய் விலை குறைந்திருந்தது. அதற்குப் பின்னர் தற்போது மீண்டும் மசகு எண்ணெய் விலை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.