பிக் பாஸ் புகழ் தர்ஷன் தற்போது சென்னையில் தங்கி தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். நேற்று கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டில் அவர் மற்றும் ஒரு நீதிபதியின் மகன் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் வகையில் போலீசில் மாறிமாறி புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் போலீசார் தர்ஷனை கைது செய்துள்ளதோடு நீதிபதியின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையடுத்து இது சர்ச்சையாகியுள்ளது.
இதனையடுத்து முன்னாள் காதலியான நடிகை சனம் ஷெட்டி ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். தர்ஷன் கைது செய்தது குறித்து தான் ஒரு நொடி சந்தோசமான உணர்வை கொண்டதாகவும், ஆனால் அந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என யோசித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே திங்கள் அன்று தான் நடக்கும். சிசிடிவி காட்சிகள் இருந்தால் அவை வெளியிடப்பட்டிருக்க வேண்டுமென்றும், தவறு செய்யாதவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது மிகப்பெரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தற்போது சனம் ஷெட்டி தர்ஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.