இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான இரண்டாவது படம் டிராகன். இவரது முதல் படமான ஓ மை கடவுளே மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. இதை தொடர்ந்து டிராகன் 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் தற்போது 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டிராகன் திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
ரூ. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது இந்த அளவிற்கு வசூல் செய்து, தயாரிப்பாளரிற்கு மாபெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது.