11.3 C
Cañada
March 20, 2025
இலங்கை

மனித உரிமை மீறலின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிறப்பிக்கப்பட்ட, ஹெராயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்கும் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவு கைது செய்த ஹேனகம, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் அரசின் நடவடிக்கை தவறானது என்று முடிவுக்கு வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த அடிப்படை மனித உரிமை மீறல் நடைபெற்றதாகக்கூறி, அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரை கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

admin

காதலியைக் கொலை செய்ததாகக் கூறி பொலிஸாரிடம் சரணடைந்த 21 வயது இளைஞன்

admin

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்

admin

Leave a Comment