11.3 C
Cañada
March 20, 2025
உலகம்

ஹோண்டுராஸ் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம் – 12 பேர் பலி

ஹோண்டுராஸ் கடற்கரையில் சிறிய வணிக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் பிரபல கரிஃபுனா இசைக்கலைஞர் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை இரவு ரோட்டன் தீவில் இருந்து லா சீபாவின் பிரதான நிலப்பகுதிக்கு செல்லும் வழியில் லான்சா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே கடலில் விழுந்தது. அதில் 17 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர், அவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உள்ளூர் மீனவர்கள் உயிர் பிழைத்தவர்களை மீட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இவ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், ஆப்பிரிக்க மற்றும் பூர்வீக இனக்குழுவைச் சேர்ந்தவருமான ஆரேலியோ மார்டினெஸ் சுவாசோவும் ஒருவர்.

Related posts

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு

admin

41 நாடுகளிற்கு பயணத்தடை விதித்த அமெரிக்கா

admin

Leave a Comment