6.3 C
Cañada
March 23, 2025
உலகம்

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 85 பேர் பலி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாயன்று காசா முழுவதும் இஸ்ரேல் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 400க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் இஸ்ரேல் மீண்டும் காசா மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களுடன், வடக்கு பெய்ட் லஹியாவில் உள்ள வீடுகளும் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களில் சுமார் 85 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன, மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

Related posts

பணயக்கைதி விடுவிப்பில் இஸ்ரேலின் கோபத்தை மீண்டும் தூண்டிய ஹமாஸ்

admin

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3ம் இடத்தில் பாகிஸ்தான்

admin

ஐரோப்பிய இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு – ட்ரம்ப் மிரட்டல்

admin

Leave a Comment