உலகில் முதன்மையான யூடியூபர்களில் ஒருவர் மிஸ்டர் பீஸ்ட் எனப்படுகின்ற ஜிம்மி டொனால்டுசன் ஆவார். பல மில்லியன் ஃபாலோவர்ஸ் இனைக் கொண்டிருக்கும் மிஸ்டர் பீஸ்ட் தான் உருவாக்கும் வீடியோக்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். இவர் யூடியூப் மட்டுமின்றி பல்வேறு செயல்களில் ஆர்வம் கொண்டவர்.
அந்த வரிசையில், யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் தற்போது அறிவித்து இருக்கும் திட்டம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆப்பிரிக்கா பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குவதாக மிஸ்டர் பீஸ்ட் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மேற்கத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கோகோ தோட்டங்களில் பணியாற்ற வைக்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் ஆப்பிரிக்க சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.