13.2 C
Cañada
March 26, 2025
உலகம்

பொய்யான தகவல்களை வழங்கியதால் சாட்ஜிபிடி மீது வழக்கு!

நார்வேயை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென், சாட்ஜிபிடியில் தனது விவரங்களை கேள்வியெழுப்பியபோது அதிர்ச்சியடைந்தார். காரணம், சாட்ஜிபிடி அவரைப் பற்றி முழுமையாக பொய்யான தகவல்களை வெளியிட்டது.

சாட்ஜிபிடியின் பதிலில், ஹோல்மனுக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அவர்கள் 2020 ஆம் ஆண்டு ஒரு குளத்தில் இறந்து கிடந்ததாகவும், குழந்தைகளை கொலை செய்ததற்காக அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனால் மனவேதனை அடைந்த ஹோல்மன், நொய்ப் (NOYB) என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகி, ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரில், பொய்யான தகவல்களை பரப்பியதற்காக ஓபன் ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related posts

ஹீத்ரோ விமான நிலைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திருப்பம்

admin

சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரிப்பு

admin

அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்-அயதுல்லா அலி

admin

Leave a Comment