10.1 C
Cañada
March 27, 2025
இலங்கை

யாழில் கண்டோஸ் திருடியதாக கூறி கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கடை உரிமையாளர்

யாழ்ப்பாணம் வடமராட்சி, பொற்பதி பகுதியில், ஒரு கடை உரிமையாளர் 10 வயது சிறுமியை கெண்டோஸ் திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

சிறுமியின் தாயார், அவரை கடைக்கு அனுப்பி சில பொருட்களை வாங்கச் சொல்லியிருந்தார். சிறுமி கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய பின்னர், மீதமான பணத்திற்காக கண்டோஸ் ஒன்றை எடுத்து உண்டுகொண்டிருந்தார். இதை பார்த்த கடை உரிமையாளர், சிறுமி திருடியதாக நினைத்து வயரால் கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது, சிறிது நேரம் கழித்து சிறுமியின் கட்டை அவிழ்த்து விட்டுள்ளனர்.

தாக்குதலால் பெரும் வேதனை மற்றும் அவமானத்தை எதிர்கொண்ட சிறுமி, தன்னுடைய உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக சிறுமியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழர் பகுதியில் சட்டவிரோதமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

admin

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin

அநுராதபுர பெண் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது

admin

Leave a Comment