கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே பிரான்ஸ் விமானப்படையின் இரண்டு ஆல்பா ஜெட் ரக விமானங்கள் பயிற்சியின் போது நடுவானில் மோதிக்கொண்டன.
மோதலுக்கு முன், இரண்டு விமானிகளும் பாராசூட்டின் உதவியுடன் கீழே குதித்து உயிர் தப்பினர்.
விபத்திற்குப் பிறகு, விமானங்கள் விழுந்து வெடித்ததால் அருகிலிருந்த ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
எனினும், பெரிய சேதங்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.