20.2 C
Cañada
April 1, 2025
உலகம்

தென்கொரியாவில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் புத்த கோவில் காட்டுத்தீயால் சேதம்

தென்கொரியாவில் முன்பு பாத்திராத அளவில் காட்டுத்தீயின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயால் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 200-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தின் காரணமாக 27 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். சியோன்டியுங்சான் மலைப் பகுதியில் காட்டுத்தீ பரவியதை அடுத்து ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உன்ராம்சா புத்த கோவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கவுன்சா கோவிலும் தீயில் பெருத்த சேதமடைந்துள்ளது. மதிப்புமிக்க இந்த இரண்டு கோவில்களுடன் மேலும் 20-க்கும் அதிகமான கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தென்கொரியா கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவான மழை பொழிந்துள்ளது. இதுவரை 244 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 2.4 மடங்கு அதிகமாகும். தீயை கட்டுப்படுத்துவதற்கு முன்பு அது மேலும் தீவிரமடையலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Related posts

காசாவில் ஹமாஸினை வெளியேறக் கோரி மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டம்

admin

பிரித்தானியாவின் மிக விலையுயர்ந்த வீதியிலுள்ள ஒரு வீட்டின் விலை ரூ.500 கோடி

admin

ஜெர்மனியில் வேலையின்மை கடுமையாக உயர்வு

admin

Leave a Comment