20.2 C
Cañada
April 1, 2025
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை விசாரித்த இரண்டாவது நீதிபதியும் விசாரணையிலிருந்து விலகியுள்ளார்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று காலை வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதன் பிறகு வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் வழக்குக்கு புதிய நீதிபதியை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி வழக்குக்கு பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக மே 21 ஆம் தேதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin

மனித உரிமை மீறலுக்கு தண்டனை தவிர்க்க முடியாதது – சரத் பொன்சேகா

admin

வெளிநாட்டவர் முச்சக்கர வண்டியை செலுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடு

admin

Leave a Comment