13 C
Cañada
April 2, 2025
இலங்கை

நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு – 3 மில்லியன் பயணிகளை ஈர்க்க திட்டம்!

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 26 வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தின் முதல் 26 நாட்களிலேயே 191,982 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வருடம் மொத்தமாக 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இஷாரா செவ்வந்தி மாலைத்தீவிற்கு தப்பியிருக்க கூடும் என பொலிசார் சந்தேகம்

admin

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

admin

யாழ் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது

admin

Leave a Comment