ஒருகாலத்தில் சின்னத்திரையில் பிரபலமானவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த நிலையில் இன்று யூடியூபில் பிரபலமாக இருப்பவர்களுக்கே சினிமா வாய்ப்புகள் வந்து சேரும் நிலை உருவாகியுள்ளது.
அந்த வரிசையில் யூடியூபில் பிரபலமான VJ சித்து தற்போது திரைப்படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்த அவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் அடுத்ததாக VJ சித்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் அந்த படத்தை அவரே இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த புதிய திரைப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வீடியோவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.