16.3 C
Cañada
April 2, 2025
இலங்கை

எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் பலி

நெட்டாங்கண்டல் மூன்றுமுறிப்பு பகுதியைச் சேர்ந்த இராமலிங்கம் தங்கேஸ்வரன் (52) என்பவர் எருமை மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் கடந்த வியாழக்கிழமை (27) மைத்துனரின் பிறந்த நாளுக்காக சென்றுவிட்டு இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்தார்.

இளம்மருதங்குளம் பகுதியில் அவர் செல்கையில் மோட்டார் சைக்கிள் எருமை மாட்டுடன் மோதியதில் கடுமையாக காயமடைந்தார். அவர் முதலில் நெட்டாங்கண்டல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மல்லாவி மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் வெள்ளிக்கிழமை (28) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவத்துக்கு தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

Related posts

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

admin

அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ்

admin

யாழில் கண்டோஸ் திருடியதாக கூறி கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கடை உரிமையாளர்

admin

Leave a Comment