13.5 C
Cañada
April 3, 2025
உலகம்

மியன்மார் பூகம்பம்: 30 மணிநேரம் இடிபாடுகளில் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு!

மியன்மாரின் மண்டலாயில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தால் முற்றாக தரைமட்டமான கட்டிடமொன்றின் இடிபாடுகளில் இருந்து மீட்பு பணியாளர்கள் பெண் ஒருவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

பூகம்பம் ஏற்பட்ட 30 மணிநேரங்களுக்குப் பிறகு 30 வயதான பியுலே கைங் என்ற பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்கைவிலா கட்டிட தொகுதியின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் மீட்பு குழுவினர் உதவியுடன் வெளியே கொண்டுவரப்பட்டார்.

பெண்ணை மீட்ட உடனே அவரது கணவர் உணர்ச்சிவீச்சுடன் அவரை கட்டிப்பிடித்து அழுதார். உயிருடன் மீட்கப்பட்ட அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

“அவர் உயிருடன் இருப்பார் என நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை” என்று கணவர் கண்களில் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Related posts

ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுதான் காரணம்! இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சி விமர்சனம்

admin

உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோ – ஜேர்மனியின் புதிய உதவித் திட்டம்

admin

தென் ஆபிரிக்காவில் 1 வாரக் குழந்தைக்கு நடந்த கொடூரம்

admin

Leave a Comment